Welcome Back to பல்சுவை வலைப்பூ. Powered by Blogger.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

தோல் நோய்கள் குறைய‌....


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக....

பாட்டி வைத்தியம் இணையதளத்தில் இருந்து படித்த பதிவை நான் இங்கு பதிந்து கொள்கின்றேன்
கிழ்கண்ட மூலிகைகளை நன்றாக இடித்து மற்றும் தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி வடிகட்டு தடவி வந்தால் சொறி, படை போன்ற தோல் நோய்கள் குறையும்.
கஸ்தூரி மஞ்சள்
கருஞ்சீரகம் 

தேங்காய் எண்ணெய்


அறிகுறிகள்:

சிரங்கு.
படை.



தேவையான பொருள்கள்:

சிவனார் வேம்பு = 25 கிராம்
சிறுதேக்கு = 25 கிராம்
கடுகு = 25 கிராம்
கருஞ்சீரகம் = 25 கிராம்
கஸ்தூரி மஞ்சள் = 25 கிராம்
நீரடிமுத்துக்கொட்டை = 25 கிராம்
தேங்காய் எண்ணெய் = 500 மி.லி

செய்முறை:

சிவனார் வேம்பு, சிறுதேக்கு, கடுகு, கருஞ்சீரகம், மற்றும் கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை நன்றாக இடித்து கொள்ள‌வும்.
நீரடிமுத்துக்கொட்டைகளை உரலில் போட்டு 100 மி.லி தேங்காய் எண்ணெய் விட்டு நன்கு இடித்து எண்ணெயோடு சேர்த்து அதை எடுத்து கண்ணாடி பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.
ஒரு இரும்பு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் இடித்து வைத்த நீரடிமுத்துக்கொட்டைகளை போட்டு 3 நிமிடங்கள் சிறு தீயாக எரித்து இடித்து வைத்துள்ள மூலிகைகளை போட்டு மீண்டும் 7 நிமிடங்கள் சிறு தீயாக எரித்து இறக்கி 24 மணி நேரம் அதை தெளிய வைத்து வடிகட்டி எண்ணெயை மட்டும் சுத்தமான பாத்திரத்தில் பத்திரப்படுத்தவும்.


உபயோகிக்கும் முறை:

இந்த எண்ணெயை மயிலிறகு அல்லது பஞ்சில் நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் காலை, மாலை தடவி சீகைக்காய் போட்டு குளிக்கவும்.
மேலும் பஞ்சால் நனைத்து கட்டு போட்டும் வரலாம். தினமும் கட்டை பிரித்து புதிதாக கட்ட வேண்டும்.

குறிப்பு:

நீரடிமுத்துக்கொட்டைகளை இடிக்கும் போது கை, முகம் மற்றும் மற்ற  இடங்களிலும் தெறிக்காமல் கவனமாக இடிக்கவும்.
சிறிது சிற்றாமணக்கு எண்ணெயை முகம் மற்றும் கைகளில் தடவி கொண்டு இடிப்பது மிகவும் நல்லது.



தொடர்பு உள்ள இடுக்கை
Beauty Tips 02
பாட்டி வைத்தியம் 01
மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்
Beauty Tips
நபி[ஸல்]வழி மருத்துவம்!



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துரைகள்:

Post a Comment

குறை நிறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்.

பதிவை வாசித்தமைக்கு நன்றி அடுத்த பதிவையும் வாசித்துச் செல்லுங்கள் நன்றியுடன் உங்கள் நண்பன் Farhan

Blogger Widgets