Welcome Back to பல்சுவை வலைப்பூ. Powered by Blogger.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

முதல் எதிரி யார்?


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
நிலவில் முதலில் கால் வைத்தவர் யார் என்று கேட்டால் யாராக இருந்தாலும் உடனே நீள் ஆம்ஸ் ரோங் என்று சொல்லி விடுவீர்கள்.

நிலவில் முதலில் கால வைத்து இருக்க வேண்டியவர் யார் தெரியுமா?
பல பேருக்கு தெரியாது எட்வின் சி ஆல்ட்ரின் Edvin c Altrin அவர்தான் நிலவுக்கு சென்ற அப்பலோ விண்கலத்தின் விமானி (Pilot)

ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமான படையில் பணி புரிந்தவர்
மேலும் வின்நடை அனுபவம் உள்ளவர் அதனால் அவர் பைலட்டாக நியமிக்கப்பட்டார்
நீள் அம்ஸ் ரோங் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலை பார்த்தவர் மிகுந்த தைரியசாலி என்பதால்தான் அவர் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
அவர் கோ பைலட் (Co-Pilot) அதாவது இணை விமானி



இவர்கள் சென்ற அப்பலோ விமானம் நிலவை சென்று அடைந்ததும் Go Pilot First என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

அனால் ஆல்ட்ரினுக்கே மனதில் சின்ன தயக்கம்
நிலவில் முதன்முதலில் கால் எடுத்து வைக்க போகின்றோம் புவி ஈர்ப்பு விசை அற்ற இடத்தில் இருக்கின்றோம்

கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது
புதை மணலாக இருந்து உள்ளே இழுத்து விட்டால் ,
எரி மணலாக இருந்து காலை சுட்டு விட்டால்? தயக்கத்தில் மணிக்கணக்காய் தாமதிக்க வில்லை சில நொடிகள்தான் தாமதித்து இருப்பார்

அதற்க்குள் நாசாவிடம் இருந்து Co-Pilot Next இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது நீள் ஆர்ம்ஸ் ரோங் கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்து வைத்தார்

உலக வரலாறு ஒரு நொடித் தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது
திறமையும் தகுதியும் இருந்தும் கூட தயக்கத்தின் காரணமாக தாமத்தித்ததால் இன்று ஆள்ற்றினை யாருக்கும் தெரியவில்லை.

முதலாவது வருபவரைதான் இந்த உலகம் நினைவில் வைத்து இருக்கும் என்பது மட்டும்மல்ல
தயக்கம் பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்க்கு இது ஒரு உதாரணம்.

இனி நிலவைப்பார்க்கும் போதெல்லாம் இந்த சம்பவத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

ஒரு நிமிட தயக்கம் நம் மிகப்பெரிய வெற்றிகளை தடுத்து விடுகின்றது நாம் எல்லோருமே மிகப் பெரும் சாதனைகளை படைக்கின்ற வல்லமை உடையவர்கள்தான்.
நம்முடைய தயக்கம், பயம் ,கூச்சம்தான் நம் முதல் எதிரி

நன்றி எங்கள் தேசம் Feb மாத இதழ்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துரைகள்:

Post a Comment

குறை நிறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்.

பதிவை வாசித்தமைக்கு நன்றி அடுத்த பதிவையும் வாசித்துச் செல்லுங்கள் நன்றியுடன் உங்கள் நண்பன் Farhan

Blogger Widgets