Welcome Back to பல்சுவை வலைப்பூ. Powered by Blogger.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

வெஜிடபுள் (Vegetable) மேன்சோ


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக....
சென்ற பதிவில் அதிரடி ரசம் தயாரிப்பது பற்றி எழுதி இருந்தேன் (அதிரடி ரசம் தயாரித்தீங்களா? எப்படி இருந்துச்சு? :) )

இன்றைய இந்தபதிவில் நான் இதுவரைக்கும் அறிந்திடாத வெஜிடபுள் (Vegetable) மேன்சோ எனும் சமையல் குறிப்பு ஒன்றை எழுதுகின்றேன் நீங்களும் சமைத்து பாருங்களேன்.

வெஜிடபுள் (Vegetable) மேன்சோ தயாரிப்பதற்க்கு தேவையான பொருட்கள் 






  • கேரட் (Carrot ) - 100g
  • பீன்ஸ் (Beans) - 50g
  • கோஸ் - 50g
  • பூண்டு - 10 பல்
  • கொத்துமல்லி - 1/4 கட்டு
  • சோயா மாவு - 02 Tea Spoon
  • பச்சை மிளகாய் - 01
  • பச்சைப் பட்டாணி - 10g
  • வெங்காயம் - 01
  • அஜினமோடோ - 01 சிட்டிகை
  • உப்பு - தேவையான அளவு
  • மிளகுத்தூள் - தேவையான அளவு
  • எண்ணெய் - தேவையான அளவு


எப்படி செய்யுறது ?



காய்கறிகள் , கொத்தமல்லித்தாழையை மிகப்பொடியாக நறுக்கிகொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு , பச்ச மிளகாய் , வெங்காயம் , பூண்டுடன் காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.

இத்துடன் 3 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

பின் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தாழையையும் சேர்த்து நன்கு கொதித்தபின்
05 Tea Spoon தண்ணீரில் சோயா மாவைக்கரைத்து ஊற்றவும்.

பின் அஜினமொடோ , உப்பு , மிளகுத்தூள் சேர்த்து பருகக்கொடுக்கவும்

சாப்பிட்டு சுவையா இருந்தா அப்படியோ குமுதம் சிநேகிதி இதழுக்கு ஒரு Tanks சொல்லிட்டு சாப்பிட்டு மகிழுங்க.




தொடர்புள்ள இடுக்கைகள் 


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துரைகள்:

Post a Comment

குறை நிறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்.

பதிவை வாசித்தமைக்கு நன்றி அடுத்த பதிவையும் வாசித்துச் செல்லுங்கள் நன்றியுடன் உங்கள் நண்பன் Farhan

Blogger Widgets