அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
பலரும் படித்து பயன் பெற வேண்டும் என்பதற்காக Panaikulam Thowheed Jamath இன் Facebook பதிவை Copy செய்து இங்கு பதிவு செய்துள்ளேன்..
பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுகளை பன்னாட்டு நிறுவனகள் சந்தைப்படுத்தி கொள்ளை லாபம் அடித்து வருகின்றன.
இது போக Junk Food , குளிர்பானகள் என்று பல வகையிலும், நுகர்வோரின் ஆரோக்கியத்தைக் கெடுத்து வருகின்றன. இது உடலுக்கு ஆபத்து என்று, பல மருத்துவர்கள் அறிவுறுத்தினாலும் , அதன் சுவைக்கு அடிமையாகி இதை உபயோகிப்போர் பலர். இதில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம்..
ஆனால், இந்த நிறுவனங்கள் தங்கள் உணவில் உள்ள உடலுக்குக் கேடு தரும் பொருட்களின் அளவு எவ்வளவு உள்ளது என்பதைத் தெரியப்படுத்தாமல் ஏமாற்று வேலை செய்து, மக்களை நோயாளிகளாக்கி வருகின்றன.
WHO மற்றும் National Institute Of Nutrtion , ஆகிய சுகாதார நிறுவன்ங்கள் மனிதன் ஒரு நாளைக்கு அதிக பட்சமாக எவ்வளவு உப்பு, சர்க்கரை, கொழுப்பு, மாவுச்சத்து போன்றவை உட்கொள்ள வேண்டும் என்று ஒரு வரையறை வகுத்துள்ளன. அதற்கு மேல் சாப்பிட்டால், உடல்நலம் பாதிக்கபடும் என்று அச்சுறுத்தியுள்ளன.
தினமும் தேவையான அளவு..
Centre For Science and environment (CSE ), பிரபலமான பதினாறு நிறுவனகளின் உணவு மாதிரிகளை எடுத்து ஆய்வு நடத்தியதில், இந்த அளவு, முக்கியமாக உப்பு, மற்றும் Transfat (மிக மோசமான , விரைவில் இரத்தக் குழாய் அடைத்து ஹார்ட் அட்டாக் வரவைக்கும் கொலேஷ்டேரால் ), அதிகமாக உள்ளதையும், பல நிறுவங்கள், உணவில் உள்ள இந்த பொருள்களின் அளவை, மறைத்தோ குறைத்தோ கவரில் குறிப்பிட்டு உள்ளது என்றும் தெரிவிக்கின்றன,
சில உதாரணம்
உப்பின் தினசரி உட்கொள்ளும் அளவு 6 கிராம்,ஆனால் 80-gram packet of Maggi noodles 3 .5 கிராம் உப்பு உள்ளது. இது ஒரு பாக்கெட் தின்றால், ஒரு நாளின் அறுபது சதவிகித உப்பு கிடைத்து விடும்,.மீதி உணவில் நாம் உப்பின் அளவை 2 . 5 கிராம் கீழ் தான் வைக்க வேண்டும்,, ஆனால் இது முடியாத காரியம்.. ஆனால் இரண்டு மூன்று பாக்கெட் 80-gram packet of Maggi நூட்லஸ் தின்றால் நிலைமை இன்னும் மோசம்.. சீகிரமே இரத்தக் கொதிப்பு வந்து விடும்
.
மோசமான கொழுப்பு எனப்படும் TRANSFAT நாள் ஒன்றுக்கு ஆண்கள் 2.6 gram , பெண்கள் 2.1 gram , சிறுவர்கள் (10-12 years) 2.3 கிராம் தான் அதிக பட்சம் இருக்கலாம்
.தினசரி உண்ணும் உணவு கலோரியில் அதிக பட்சம் 1 சதவிகிதம் தான் TRANSFAT மூலம் வரணும்.
அதிக சுவை கொண்ட MacDonald’s Happy Meals யில் இருந்து தொண்ணூறு சதவிகித கலோரி வந்து விடுகிறது. அனால் அந்த உணவின் கவரில் இந்த TRANSFAT பற்றி எதுவும் குறிப்பிடவே இல்லை.
Top Ramen Super Noodles (Masala) தனது உணவில் zero trans fats in every 100 gram –என்று குறிப்பிட்டு உள்ளது. ஆனால் CSE ஆய்வுப்படி 0.7 gram per 100 gram.
Haldiram’s Aloo Bhujia ஜீரோ TRANSFAT என்று குறிப்பிட்டு உள்ளது. அனால் CSE ஆய்வில் 2.5 gram per 100 gram உள்ளதாக அம்பலபடுத்தியுள்ளது
PepsiCo’s Lays (Snack Smart) தனது சிப்ஸ் மிகவும் ஆரோக்யமானது. ஏனெனில், அதில் ஜீரோ transfat என்று பிப்ரவரி 2012 வரை விளம்பரம் செய்து வந்தது.இந்த விளம்பரம், பின்னர் நீக்கப்பட்டது. CSE ஆய்வு முடிவில் இந்த MARCH 2012 batch PepsiCo’s Lays (Snack Smart) பக்கெட்டில் 3.7 gram of trans fats per 100 கிராம் transfat உள்ளது என்று தெரியவந்தது.. அனால் நிறுவனமோ, நுகர்வோருக்கு இதைத் தெரிவிக்கவில்லை.
அதிக அளவிலான transfat , மற்றும் உப்புவுடன் தொடர்ந்து இந்த உணவை சாப்பிட்டால் நமது உடன் நலம் கேட்டு மரணத்தை விளைவிக்கலாம்.
Trans பாட்ஸ் இரத்த குழாயில் படிந்து,அதன் விட்டதைச் சுருக்கி ஹார்ட் அட்டாக் உண்டு பண்ணலாம்.
உப்பு இரத்தக் கொதிப்பு ஏற்படுத்தும். இந்த இரண்டும் சேர்ந்து இதயத்திற்கு அதிக வேலைப் பளுவை கொடுத்து, ஹார்ட் பெயிலியர் வரலாம்.
Food Safety and Standards Authority of India (FSSAI) என்ற அரசு அமைப்பு, உணவு நிறுவன்ங்கள், அந்த உணவில் உள்ள பொருள்களின் அளவை மறைக்காமல், சரியான அளவைத் தெரியப்படுத்த வேண்டும் என்று, விதி விதித்தும் அனேக நிறுவனங்கள் இதைக் காற்றில் பறக்க விட்டுவிட்டன.
நன்றி Panaikulam Thowheed Jamath Post
0 கருத்துரைகள்:
Post a Comment
குறை நிறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்.
பதிவை வாசித்தமைக்கு நன்றி அடுத்த பதிவையும் வாசித்துச் செல்லுங்கள் நன்றியுடன் உங்கள் நண்பன் Farhan