Welcome Back to பல்சுவை வலைப்பூ. Powered by Blogger.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

நிறக்குருடு (Color blindness)

நிறக்குருடு

நம் நாட்டில பல மூட நம்பிக்கைகள் பற்றி பேசப் படுகின்றன அவற்றில் காலை  சிவப்பு நிறத்தைப் பார்த்தல் கொபம் அடையும் என்பதும் , சிவப்பு துணி அணிந்து இருப்பவர் எதிர்ப் பட்டால் துரத்தும் என்பதும் ஓன்று .

 உண்மையா? என்றால் உண்மை இல்லை என்பதுதான் உண்மை.

பொதுவாக கால் நடைகளுக்கு சிவப்பு ,நீலம் ,கருப்பு என்று பிரித்துப்பார்க்கத் தெரியாது.

ஏன் என்றால் அவைகளுக்கு நிறக்குருடு (Color blindness) அதனால் தான் அவற்றிற்க்கு எல்லா நிறமும் ஒரே மாதிரித்தான் தெரியும் .

ஸ்பெயினில் நடை பெரும் புள் பைட் (Bull Fight) எனப்படும் காளை  விளையாட்டில் சிவப்புத்துணியை காட்டித்தான் வெறி ஏற்றுவர்.

ஆனால்  இந்த சிவப்பு நிறத்தைப் பார்த்து ஆத்திரப் பட்டு காளை பாய்வது இல்லை.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

ஸ்ட்ரோபரி சான்விட்ச்



தேவையான பொருட்கள் 

பிரட்  துண்டுகள் (Bread)  - 04
வாழைப்பழம் - 01 (நறுக்கியது)
மாதுளை விதைகள் - 03 Table Spoon
ஆப்பிள் (Apple) - 01
அன்னாசி ஜாம் - 1/2 Cup
உப்பு - தேவையான அளவு
சாட் மசாலா  - 01 Tea Spoon
வெண்ணை - 01 Tea Spoon
மிளகுத்தூள் - 01 Tea Spoon
ஸ்ட்ரோபரி   - 03 or 04

செய்முறை 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

உலக முஸ்லிம்கள் உயிராய் நினைக்கும் முஹம்மத் யார் இவர்?

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

 இறுதிதூதராகிய முஹம்மத் (ஸல்) அவர்களை  இஸ்லாமிய மக்கள் ஏன் இவ்வளவு விரும்புகிறார்கள்? யார் இவர்? அப்படி என்ன நற்பண்புகள் தான் அவரிடத்தில் இருந்தது?  இக்கேள்விகளுக்கான  விடையே உங்கள் கையில் இருக்கும் இந்த வெளியீடு...

சிறிது நேரம் ஒதுக்கி முழுமையாக படியுங்கள்... இதை படித்து முடிக்கும் போது "இவர் ஏன் சிறந்தவர்" என்ற கேள்விக்கு உங்கள் மனம் சரியான விடை சொல்லும் (இறைவன் நாடினால்)...

நேர்மை :

இவர் ஒரு நம்பிக்கையாளர், உண்மையாளர் என்று இவரை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட கூறும் அளவிற்கு நற்பெயர் பெற்றிருந்தார்கள். அரசு கருவூலத்தில் இருக்கும் ஒரு துண்டு பேரிச்சை பழத்தை தனது பேரன் வாயில் போட , இறைத்தூதரோ பதறிப் போய் வாயில் இருந்து பேரிச்சையை வலுக்கட்டாயமாக துப்ப வைத்து "அரசு பணத்தில்  எதுவும் நமக்கு சொந்தமானது அல்ல" என்று கூறினார்கள்.   கருவூலத்திற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனச் சொல்லும் ஆட்சியாளரை காண முடியுமா நம்மால்?

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

விஸ்வரூபம் திரைப்படம் குறித்த ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

விஸ்வரூபம் திரைப்படம் குறித்த ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு

கமல் ஹாஸன் இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம் திரைப்படம் உலகளாவிய முஸ்லிம் மக்களிடம் பாரிய அதிர்வலைகளை தோற்றுவித்தமையை அடுத்து, இந்தியாவின் தமிழகம், பெங்களுர், ஹைதராபாத் உள்ளிட்ட மாநிலங்களிலும், சிங்கப்பூர், மலேசியா, பஹ்ரைன், குவைட், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கடார் உள்ளிட்ட பல நாடுகளிலும் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. விஸ்வரூபத்தை இலங்கையிலும் தடை செய்ய வேண்டும் என்று நாம் கோரிக்கை வைத்ததனை அடுத்து முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதமாய் தற்காலிக தடையுத்தரவினை இலங்கை அரசு அறிவித்ததோடு, முஸ்லிம் புத்தி ஜீவிகள் மற்றும் அரசியல் தலைவர்களின் பார்வைக்குப் பின் வெளியீடு குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அறிவித்திருந்தது.

இதற்கமைவாக கடந்த 29-01-2013 அன்று இரவு 7.00 மணி முதல் 9.30 மணி வரை இத்திரைப்படம் குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய புத்தி ஜீவிகள், இயக்கப் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பார்வைக்கு விடப்பட்டது. ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக ஜமாத்தின் துணை தலைவர் மவ்லவி பர்சான் மற்றும் ஜமாத்தின் துணை செயலாளர் மவ்லவி ரஸ்மின் ஆகியோர் திரைப்படத்தை பார்வையிட்டார்கள்.

இத்திரைப்படத்தினை பார்வையிடுவதற்கு முன்னால் எங்களிடம் இத்திரைப்படம் குறித்து என்ன மனப்பதிவு காணப்பட்டதோ, அந்த மனப்பதிவு பார்வையிட்டதன் பின்பு முன்பிருந்ததை விட எதிர்ப்பு மனப்பான்மையை அதிகரிக்கச் செய்துள்ளதே தவிர கிஞ்சிற்றும் தணிவடையச் செய்யவில்லை என்பதை அழுத்தமாய் இங்கு பதிவு செய்ய விரும்புகின்றோம். தமிழ் திரைப்பட வரலாற்றில் ஆங்காங்கே அவ்வப்போது முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் சீண்டி சில திரைப்படங்கள் வெளியிடப்பட்ட போதிலும் மொத்தமாய் இஸ்லாமிய எதிர்ப்புணர்வை சமுதாய மன்றில் விதைக்கும் திரைப்படமாகவே விஸ்வரூபத்தை அடையாளப்படுத்தப்பட வேண்டியுள்ளது. அதுமட்டுமன்றி, ஜிஹாத் மற்றும் இஸ்லாம் குறித்த தவறான புரிதலை மாற்றுமத அன்பர்கள் அகங்களில் தோற்றுவிக்க முனைந்திருப்பதோடு, முஸ்லிம் விரோத எதிர் மறை உணர்வை சமூக தளத்தில் விதைப்பதாகவும் இத்திரைப்படம் அமைந்துள்ளது.

ஏலவே நீருபூத்த நெருப்பாய் இனமுறுகள்கள் அதிகரித்து வரும் தருணத்தில் முஸ்லிம்கள் குறித்த மூன்றாம் தரப் பார்வையை பேரின சமுதாயத்தவர் மத்தியில் இத்திரைப்படம் விதைக்குமாயின் அதன் எதிர் வினை பாரிய அதிர்வுகளாய் முடியும் என்பதை கருத்திற் கொண்டும், இந்நாட்டின் சட்ட ஒழுங்கும், சமுதாய நல்லிணக்கமும் ஒரு கூத்தாடியின் திரைப்படக் காட்சிகளினால் சீர்குலைந்து விடக் கூடாது என்பதனையும் சிந்தையிற் கொண்டு விஸ்வரூபம் திரைப்படம் முற்று முழுதாக இலங்கையில் தடை செய்யப்பட வேண்டும் என்ற எமது கோரிக்கையை உங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம். அத்தோடு, நாம் இவ்விறுதி முடிவை எட்டுவதற்கு ஏதுவாக அமைந்த கராணங்களையும் உங்கள் கவனத்திற்கு அறிக்கையாய் சமர்ப்பிக்கின்றோம்.

விஸ்வரூபம் ஏன் தடை செய்யப்பட வேண்டும்?

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

குர்ஆன் இறைவனால் அருளப்பட்டதா? உஸ்மான் (ரலி) அவர்களால் தொகுப்பட்ட பிரதிதானே தற்போதுள்ள குர்ஆன்?.


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக
ஒற்றுமை எனும் இணையதளத்தில் இருந்து பெற்ற ஆக்கம்....

 கேள்வி எண் 1.
குர்ஆனின் பல பிரதிகள் உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில்; உஸ்மான் (ரலி) அவர்களால் எரிக்கப்பட்டது. குர்ஆன் இறைவனால் அருளப்பட்டதல்ல. மாறாக உஸ்மான் (ரலி) அவர்களால் தொகுப்பட்ட பிரதிதானே தற்போதுள்ள குர்ஆன்?.

பதில்:

இஸ்லாத்தின் மூன்றாவது கலிபா உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில் ஒன்றுக் கொன்று முரண்பட்ட பல குர்ஆனின் பிரதிகளை தொகுத்து ஒரே குர்ஆனாக உருவாக்கப் பட்டதுதான் இன்றைய அருள்மறை என்பது, குர்ஆனை பற்றி உலவுகின்ற கட்டுக்கதைகளில் ஒன்று. எந்த அருள்மறை முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்டதோ அதே அருள்மறைதான், இஸ்லாமிய உலகத்தினரால் பெரிதும் போற்றி மதிக்கப்படும் அல்லாஹ்வின் வேதமாக இன்றும் இவ்வுலகில் திகழ்கின்றது. இன்றைக்கு இருக்கும் அருள்மறை குர்ஆன் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்பட்ட ஒன்று. கட்டுக்கதைக்கான ஆணிவேர் எது என்று நாம் இப்போது ஆய்வு செய்வோம்.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0
Blogger Widgets