Welcome Back to பல்சுவை வலைப்பூ. Powered by Blogger.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69
Showing posts with label ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத். Show all posts
Showing posts with label ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத். Show all posts

மேகங்களும் மழை உருவாகும் விதமும்


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

நன்றி Sri Lanka Thowheeth Jamath ( sltj )

தனது அருளுக்கு முன்னால் நற்செய்தியாக அவனே காற்றை அனுப்புகிறான். அது கனமான மேகத்தைச் சுமக்கும் போது இறந்து போன ஊருக்கு அதை ஓட்டிச் செல்கிறோம். அதிலிருந்து தண்ணீரை இறக்கி, அதன் மூலம் எல்லாப் பலன்களையும் வெளிப்படுத்துகிறோம். இவ்வாறே இறந்தவர்களையும் வெளிப்படுத்துவோம். (இதன் மூலம்) நீங்கள் படிப்பினை பெறக் கூடும்.
(அல்குர்ஆன் 7:57)
சூல் கொண்ட காற்றுகளை அனுப்புகிறோம். அப்போது வானிலிருந்து தண்ணீரை இறக்கி உங்களுக்கு அதைப் புகட்டுகிறோம். அதை (வானில்) நீங்கள் சேமித்து வைப்போராக இல்லை.
(அல்குர்ஆன் 15:22)


சூரியன் பூமியை சூடாக்குகின்றது. பூமி உள்வாங்கிய வெப்பத்தை வெளியிடுவதன் மூலம் அருகிலுள்ள காற்றை சூடாக்குகின்றது. சூட்டினால் காற்றினுடைய அடர்த்தி குறைவடைவதனால் புவியீர்ப்பு திசைக்கு எதிர் திசையில் சூடான காற்று மேலெழும்பும். இதை வெப்ப நீரோட்டம் அல்லது வெப்ப சலனம் என்று கூறுவர். பூமியின் மேற்பரப்பானது புல் தரை, கட்டாந்தரை, மணல்வெளி, நீர்நிலை என மாறுபடுவதால் ஒரே சூட்டில் இருப்பதில்லை. இதனால் காற்றும் வௌ;வேறு உஷ்ணத்தில் சூடேற்றப்பட்டு பல இடங்களில் வேகமாகவும், சில இடங்களில் மெதுவாகவும் மேலெழும்புகின்றது. இவ்வாறு குறைந்த அழுத்த மண்டலத்தினுள் செல்லும் காற்று விரிந்து குளிர்கின்றது. இதனால் காற்றினுள் இருக்கும் நீராவியும் குளிர்ந்து வளிமண்டலத்திலுள்ள தூசு துணிக்கைகள், உப்பு ஆகியவற்றின் மீது மையம் கொண்டு திரண்டு, பரவி திரவமாகவும், ஆவியாகவும் மிதக்கின்றது. இவ்வாறே நிறைய சிறு நீர்த்துளிகள் சேர்ந்து மேகம் உருவாகின்றது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

பள்ளிகளைக் குறிவைக்கும் சிங்களக் காவிக் கரசேவர்கள்


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக..... 
கடந்த சில நாட்களாக இலங்கையில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட விடயம்தான் தம்புள்ள மஸ்ஜிதுல் ஹைரியா பள்ளி தகர்ப்பட்ட விடயம்.

இது தொடர்பாக இன்று (27-04-2012) ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் இன் உத்தியோக பூர்வ இணையதளத்தில் வெளியாகிய பள்ளிகளைக் குறிவைக்கும் சிங்களக் காவிக் கரசேவர்கள் எனும் ஆய்வுக்கட்டுரையை இன்னும் பல நபர்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதற்காக மீள் பதிவு செய்கின்றேன்

அபூ ஹம்னா ஸலபி



இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்திய, தம்புள்ள அல் ஹைராத்; ஜும்ஆப் பள்ளி தகர்ப்புப் பின்னணி குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இலங்கை பல்லின மக்கள் வாழ்கின்ற ஒரு நாடு. நாட்டின் அரசியல் சாசனம் மத சுதந்திரத்தை வழங்கியுள்ளது. இந்த சுதந்திரம் ஒரு சாரால் மீரப்படும் போது பிரச்சினைகள் எழுவதைத் தடுக்க முடியாத நிலை ஏற்படும்.
இந்த நாட்டின் பெரும்பான்மையாக வாழ்கின்ற சிங்களவர்கள் தமிழ்மக்களின் உரிமைகளைப் பரித்ததால், சுமார் 30 ஆண்டுகள் அதன் ரணத்தை அனைத்து மக்களும் அனுபவிக்க நேரிட்டது. அந்த ரணத்தின் வடுக்கள் மாறமுன்னரே இன்னொரு சிறுபான்மையான முஸ்லிம் மக்களின் பள்ளி மீது கை வைத்து மதத்துவேசத்தை சிங்களத் தீவிரவாத தீய சக்திகள் துவங்கியுள்ளன. இது ஆரோக்கியமான அறிகுறியல்ல என்பதை சுட்டிநிற்கிறது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0
Blogger Widgets