அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
இவ்வாறான தகவல்களை இன்னும் பலர் அறிய வேண்டும் என்பதற்காக மறுப்பு இணையதளத்தின் இந்த பதிவை எடுத்து இங்கு பதிந்து உள்ளேன்
OCT 8, குஜராத் போலீஸ், மகாராஷ்டிர போலீசை தொடர்பு கொண்டு, பலி கொடுக்க "சேவல்" இருக்கிறதா? எனக்கேட்க, ஆம்.,ஒரு சேவல் (சாதிக் ஜமால்) இருக்கிறது, கொண்டு செல்லுங்கள்,
என பேசிக்கொண்ட "தொலைபேசி உரையாடல்" குறித்த ஆவணங்கள் தற்போது சி.பி.ஐக்கு கிடைத்துள்ளது. கடந்த 2003 ஜனவரி 13ந்தேதியன்று குஜராத் போலீசால் "சாதிக் ஜமால்" என்ற இளைஞர் என்கவுண்டர் முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஆட்டோ டிரைவரான ஜமாலை "லஷ்கர் தையிபா தீவிரவாதி" எனவும், நரேந்திர மோடி உள்ளிட்ட ஹிந்துத்துவா தலைவர்களை கொள்ள வந்தார் என்றும், போலியான கதை கட்டி "என்கவுண்டர்" முறையில் சுட்டுக்கொன்றது குஜராத் போலீஸ்.








