அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
பலரும் படித்து பயன் பெற வேண்டும் என்பதற்காக Azeem Bin Anwer இன் Facebook பதிவை Copy செய்து இங்கு பதிவு செய்துள்ளேன்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!
ஜும்ஆ நாளும் அதன் தனித்துவமும்
''நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப் பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது.'' (அல்குர்ஆன் 62:9)
"சூரியன் உதயமாகும் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் ஜும்ஆ நாளாகும். அதில் தான் ஆதம் அலைஹிஸ்ஸலாம் படைக்கப் பட்டார்கள். அந்நாளில் தான் அவர்கள் சொர்க்க(தோட்ட)த்தில் தங்க வைக்கப் பட்டார்கள். யுக முடிவு நாளும் வெள்ளிக்கிழமை தான் ஏற்படும்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி 450)
0 கருத்துரைகள்:
Post a Comment
குறை நிறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்.
பதிவை வாசித்தமைக்கு நன்றி அடுத்த பதிவையும் வாசித்துச் செல்லுங்கள் நன்றியுடன் உங்கள் நண்பன் Farhan