தோள்கள் தினவெடுத்தஇரு கால்
நாய்களுக்கு வெறி பிடித்தால்
பலியாவது இளம் தளிரோ???
கறை படிந்து நிற்கிறதே பாரதம்
காமுகறே
கல்லாகி போனதோ மானுடம் ??
உங்கள்
ஆடம்பர பைகளில் - இனி
ஆயுதம் இருக்கட்டும்
அச்சம் உனக்கெதற்கு - இனி
ஆயுதமே உன் உடமை
அறிவாயுதமும் ......
ஓட்டுனரும் நடத்துனரும்
ஒழுக்கம் விற்றோரே !!
வெட்கம் இல்லை
மானம் இல்லை ,இல்லை ,இல்லை
தலை நகரில் பெண்ணுக்கு
வாழ் வில்லை வழி இல்லை
விலை
நிர்ணயிகபட்டு தான்
வீதியில் நிற்கிறார்களே
விலை மாதர்
பிறகேன்
ஒ !!!வக்கற்றவர்களோ நீங்கள்
காசில்லாமல் காம ஆட்டமோ
குரங்குக்கு
கொதித்து எழும் கூட்டம்
இளம் தளிருக்கு
என்ன செய்து விடும்
மான் என்றும்
மயில் என்றும் மடமை செய்தார்
மலராய் இருப்பதாலோ - உன்னை
காலம் முழுதும் கசக்கி எறிகிறார்
முறை வாசல் செய்து
முடமாகியது போதும்
இனி அடிப்பதும் உதைப்பதும்
நீயாக இருக்கட்டும் !!!
நீ
அன்பு வளர்த்து
அடிமையானது போதும் !!
இனி நீ
ஆதிக்கம் அறுக்கும் புலியாய் இரு
பெண்ணே நீ புலியாய் மாறு ..
by Faizal Mohamed Tanks Facebook Post
No comments:
Post a Comment
குறை நிறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்.
பதிவை வாசித்தமைக்கு நன்றி அடுத்த பதிவையும் வாசித்துச் செல்லுங்கள் நன்றியுடன் உங்கள் நண்பன் Farhan